உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விவசாயிகள் பிரச்னை காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் பிரச்னை காங்., கண்டன ஆர்ப்பாட்டம்

ஊட்டி;ஊட்டியில் மத்திய அரசை கண்டித்து, காங்., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.ஊட்டி நகர காங்., தலைவர் நித்திய சத்யா தலைமை வகித்தார். ஊட்டி வட்டாரத் தலைவர் ராமன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், டில்லியில் நடக்கும் விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய போராட்டத்தை, முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்காத மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் கமலா சீராளன், சுப்பன், கவுன்சிலர்கள் நாகராஜ், நாதன் உட்பட பலர் பங்கேற்றனர். காங்., விவசாய அணி தலைவர் அபிமன்யு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை