உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டுப்பன்றி கடித்து பெண் தொழிலாளி படுகாயம்

காட்டுப்பன்றி கடித்து பெண் தொழிலாளி படுகாயம்

கோத்தகிரி; கோத்தகிரி அருகே காட்டுப்பன்றி கடித்து, காயம் அடைந்த பெண் தொழிலாளி, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கோத்தகிரி நெடுகுளா குருகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் காரி என்பவரது மனைவி சுப்பியம்மாள் 60. இவர், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் அருகில் உள்ள தோட்டத்திற்கு பசுந்தேயிலை பறிக்க சென்றுள்ளார்.அப்போது, தேயிலை தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த காட்டுப்பன்றி திடீரென வெளியேறி சுப்பியம்மாளை கடித்துள்ளது. இதில், கால் மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த, சுப்பியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். வனத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். மக்கள் கூறுகையில், 'சமீப காலமாக, காட்டுப்பன்றி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர், பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்குவதுடன், வன விலங்குகளை, விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி