உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குழாய் பதிக்கப்பட்ட குழியை மூடி சமன் செய்யும் பணி

குழாய் பதிக்கப்பட்ட குழியை மூடி சமன் செய்யும் பணி

கோத்தகிரி, ;கோத்தகிரி தாலுகா அலுவலகம் சாலையில் இருந்த குழியை மூடும் பணி நடந்தது. கோத்தகிரி தாலுகா அலுவலகம் சாலையில், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. மேலும், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. இதனால், இச்சாலையில் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இங்குள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு, குழாய்கள் பதிக்க, குழிகள் தோண்டப்பட்டன. பல நாட்கள் குழி மூடப்படாமல் இருந்தது. இதனால், வாகனங்கள் மற்றும் மக்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டது. புழுதி அதிகரித்ததால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி, குழிகள் மூடப்படும் பணி துவங்கியுள்ளது. இப்பணி நிறைவடையும் பட்சத்தில், வாகனங்கள் சிரமம் இன்றி சென்றுவர முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை