உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தீ பிடித்து சேதமடைந்த கட்டடம்: சிலிண்டர்கள் மீட்பு

தீ பிடித்து சேதமடைந்த கட்டடம்: சிலிண்டர்கள் மீட்பு

குன்னுார் : குன்னுார் நான்சச் பள்ளி அருகே, பெட்டிகடை மற்றும் குடியிருப்பு தீ பிடித்து எரிந்து சேதமானது. குன்னுார் அருகே நான்சச் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர், குடும்பத்தினருடன் நேற்று காலை மார்க்கெட் வந்துள்ளார். வீட்டில் முதியவர் ஐயாகண்ணு என்பவர் மட்டுமே இருந்துள்ளார். வீட்டில் புகை வருவதை அறிந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு வெளியே அழைத்து வந்தனர். தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அதற்குள் கடையின் ஒரு பகுதி முழுமையாக எரிந்தது. டிராக்டர் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து தொழிலாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்; எனினும் தீ பரவியது. தொடர்ந்து, தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.வீட்டில் இருந்த இரு காஸ் சிலிண்டர்கள் பாதுகாப்பாக எடுத்து வெளியே கொண்டு வந்தனர். வீடு மற்றும் கடையில் இருந்த பொருட்கள், பள்ளி சான்றிதழ்கள் உட்பட அனைத்தும் தீக்கிரையானது. பள்ளி அருகிலேயே தீ பிடித்ததால், காஸ் சிலிண்டர்களை பாதுகாப்புடன் மீட்கும் வரை அனைவரும் மிகவும் அச்சத்திற்குள்ளாகினர். கொலக்கம்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை