வடகிழக்கு பருவ மழை தயார் நிலையில், தீயணைப்பு துறை
குன்னுார்: ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழையின் போது, குன்னுார் பகுதிகளில் நிலச்சரிவு உட்பட பேரிடர் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தில், 283 இடங்கள் பேரிடர் பாதிப்பு பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குன்னுாரில் மட்டும், 70 இடங்கள் உள்ளன. இதனையொட்டி, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் தயார் படுத்தப்பட்டனர். இந்நிலையில், குன்னுார் தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு வீரர்களின் பணிகள் மற்றும் மீட்பு உபகரணங்களை ஆய்வு செய்த, மாவட்ட தீயணைப்பாளர் வெங்கடாசலம் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் உள்ளோம்,'' என்றார்.