குன்னுாரில் அருகே உள்ள லாஸ் நீர்வீழ்ச்சியில் வெள்ள பெருக்கு
குன்னுார்,; குன்னுார் லாஸ் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.ஊட்டி, குந்தா, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.இந்நிலையில், குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்த போதும், மேட்டுப்பாளையம் மலைப்பாதைகளில் மழையின் தாக்கம் இல்லாமல் இதமான காலநிலை நிலவுகிறது.அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், லாஸ் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.