உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோடை சீசனுக்காக மலர் நாற்று நடவு பணி துவக்கம்

கோடை சீசனுக்காக மலர் நாற்று நடவு பணி துவக்கம்

குன்னுார் : குன்னுார் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்காக, 5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி துவங்கியது.குன்னுார் சிம்ஸ் பூங்காவில், இதுவரை இல்லாத வகையில் நடப்பாண்டில் அதிகபட்சமாக, 5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்ய தோட்டக்கலை துறை திட்டமிட்டுள்ளது. நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தி, சால்வியா மலர் நாற்று நடவு செய்யும் பணி துவங்கியது. இதனை துவக்கி வைத்த, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி கூறுகையில், ''நடப்பாண்டு கோடை சீசனின் போது இங்கு, 65வது பழக்கண்காட்சி நடக்கிறது. சீசனுக்காக, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்துள்ள, 'பிளாக்ஸ், டெல்பீனியம், ஆஸ்டர், சைக்ளமேன், லிசியான்தஸ்னா,' உள்ளிட்ட பல்வேறு அரிய மலர்களின் நாற்றுகள் நடவு பணி துவக்கப்பட்டுள்ளது.இதைதவிர, 'சால்வியா, ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, மெரிகோல்டு,' உட்பட, 35 வகையில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத அளவில், இம்முறை சீசனின் போது சிம்ஸ் பூங்கா பொலிவாகும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை