உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் தயாராகும் மலர் தொட்டிகள்

ஊட்டியில் தயாராகும் மலர் தொட்டிகள்

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. சென்னை செம்மொழிப் பூங்காவில், நடப்பாண்டுக்கான மலர் கண்காட்சி விரைவில் நடக்க உள்ளது. அங்கு நடக்க உள்ள மலர் கண்காட்சிக்காக, தமிழகத்தில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில், மலர் செடிகள் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இதற்காக மலர் தொட்டிகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதில், டெய்சி,மேரி கோல்டு உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகள் தற்போது பூங்காவில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் சென்னைக்கு கொண்டு செல்லப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை