உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் ஓணம் திருவிழாவில் பங்கேற்பு

வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் ஓணம் திருவிழாவில் பங்கேற்பு

குன்னுார்; நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லுாரியில், நம்நாடு மட்டுமின்றி நட்பு நாடுகளை சேர்ந்த, 400 மேற்பட்ட முப்படை இளம் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று பேரக்ஸ் எம்.ஆர்.சி.,யில் நடந்த ஓணம் திருவிழாவில், ராணுவ பயிற்சி கல்லுாரி கமாண்டன்ட் லெப்., ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் குடும்பத்தினருடன், கேரள பாரம்பரிய உடைகள் அணிந்து பங்கேற்றார். நம் நாட்டு முப்படை அதிகாரிகள் மட்டுமின்றி, 'இங்கிலாந்து, நைஜீரியா, ஆஸ்திரேலியா, பியூஜி, கசகஸ்தான்,' உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 100 இளம் ராணுவபயிற்சி அதிகாரிகள் ஓணம் திருவிழாவில் பங்கேற்றனர். இவர்களுக்கு செண்டை மேளம் முழங்க சிறுமியர் தாம்பூல தட்டுகள் ஏந்தி வரவேற்பு அளித்தனர். விழாவின், முடிவாக வாமனன், மாவேலி, புலியாட்டம் ஆகிய வேடமணிந்து பங்கேற்ற கலைஞர்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !