மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
9 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
9 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
9 hour(s) ago
பெ.நா.பாளையம்;இடிகரையில் உள்ள கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளியில் லண்டனைச் சேர்ந்த தம்பதியர், பள்ளி மாணவர்களுடன் சிலம்பம் விளையாடி மகிழ்ந்தனர்.லண்டனைச் சேர்ந்த நிக்கோலஸ் காக்கஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர், உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்து, அந்நாடுகளின் கலாசாரங்கள் மற்றும் வாழ்க்கை முறை குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இவர்கள் இதுவரை ஸ்காட்லாந்து, வேல்ஸ், பிரான்ஸ், ஸ்பெயின், நெதர்லாந்து, இத்தாலி, செக் குடியரசு, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர்.இந்தியா வந்த இவர்கள், துடியலூர் அருகே இடிகரை கிரேயான்ஸ் பப்ளிக் பள்ளி குழந்தைகளை சந்தித்து உரையாடினர். அவர்களுக்கு பள்ளியின் தலைவர் தினேஷ்குமார் தமிழ் முறைப்படி மாலை, மரியாதைகளுடன் வரவேற்றார். அவர்கள் தமிழ் மொழியில் வணக்கம் தெரிவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாணவர்களுடனான உரையாடலில், அவர்கள் வெவ்வேறு நாடுகளின் கலாசாரங்கள், கல்வி முறை, வேலை வாய்ப்பு, உணவு பழக்கங்கள் குறித்து, தங்கள் அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மாணவர்களின் கல்வி முறை குறித்து, ஆர்வமுடன் கேட்டறிந்தனர். பின்னர், மாணவர்களுடன் சிலம்பம் விளையாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் தீபா நந்தினி, நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago