உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பட்டாசு இல்லாத புத்தாண்டு வனத்துறையினர் அழைப்பு

பட்டாசு இல்லாத புத்தாண்டு வனத்துறையினர் அழைப்பு

கூடலுார் : முதுமலை, மசினகுடி பகுதியில் பட்டாசு இல்லாத பசுமை புத்தாண்டை கொண்டாட வனத்துறையினர் அழைப்பு விடுத்தனர்.முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வெளி வட்டம் பகுதியில் குடியிருப்புகள், தனியார் விடுதிகள் உள்ளன. புத்தாண்டு தினத்தில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சப்தம், மாசு காரணமாக, வனச் சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால், பட்டாசு இல்லாத புத்தாண்டை கொண்டாட வனத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக, சிங்கார வனச்சரகர் தனபால் தலைமையில் வன ஊழியர்கள் கிராமங்கள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு, துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதி வனம் மற்றும் வனவிலங்கு சார்ந்து வாழும் பகுதியாகும். புத்தாண்டு தினத்தில் பட்டாசு சப்தம் ஏற்படும்போது வன சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இதனால், பட்டாசு இல்லாத புத்தாண்டை கொண்டாட அறிவுறுத்தி, கிராமங்கள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும். மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை