உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலைபாதையில் சாலையை கடக்கும் யானைகள் வாகன ஓட்டுனர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

மலைபாதையில் சாலையை கடக்கும் யானைகள் வாகன ஓட்டுனர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

குன்னுார்,; 'குன்னுார் -- மேட்டுப்பாளையம் சாலையை அவ்வப்போது யானைகள் கடந்து செல்வதால், முன்னெச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில், 10 யானைகள் 3 பிரிவுகளாக பிரிந்து உலா வருகின்றன.குறிப்பாக, மரப்பாலம், ஈச்ச மரம், கே.என்.ஆர்., உட்பட பல இடங்களிலும் இவை உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையை கடக்கின்றன. குறிப்பாக, காலை, மாலை மற்றும் இரவு நேரத்தில் அடிக்கடி சாலையை கடக்கின்றன. குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில், ''இப்பகுதியில், மூன்று இடங்களில், 10 யானைகள் முகாமிட்டுள்ளன. சாலையோரங்களில் இந்த யானைகள் பசுந் தழைகளை உட்கொண்டு வருகின்றன. சாலையின் ஓரத்தில் ஒரு யானை நின்று இருந்தால், சாலையின் மேற்பகுதியில் மற்ற யானைகள் இருக்கும். இதனை அறியாமல் அங்கு வாகனங்களை நிறுத்த கூடாது. போட்டோ மற்றும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஹாரன் சப்தம் கட்டாயம் எழுப்ப கூடாது. இதனை மீறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். இரவில் வரும் வாகனங்கள் மிகவும் முன்னெச்சரிகையுடன் செல்ல வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை