மேலும் செய்திகள்
பஸ்சை கடந்து சென்ற யானை அச்சம் அடைந்த பயணிகள்
27-Dec-2025
மஞ்சூர்:நீலகிரி மாவட்டம், தமிழக-- கேரளா எல்லையை ஒட்டி முள்ளி, பெரும்பள்ளம், கெத்தை உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. கேரளா வனத்தில் ஏற்பட்ட வறட்சியால் அங்கிருந்து, 20 யானைகள் தமிழக வனத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது. இடம்பெயர்ந்த யானை கூட்டம் முள்ளியிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து பெரும்பள்ளம், கெத்தை, பென்ஸ்டாக், கெத்தை மின்வாரிய குடியிருப்புகளில் உலா வருகிறது. கெத்தை அணையையொட்டி சுற்றித்திரியும் யானை கூட்டம் மின்உற்பத்தி நிலையத்தில் நுழையாமல் தடுக்க, வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 'வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யாமல் வாகனத்தை இயக்க வேண்டும்,' என, சாலையில் ஆங்காங்கே அறிவிப்பு போர்டு வைத்து எச்சரித்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில்,'வறட்சியால் தண்ணீர் தேடியும், குட்டிகள் ஈன்றெடுக்க வேண்டியும், கெத்தை வனப்பகுதிகள் ஏற்ற சீதோஷ்ண நிலை இருப்பதால், அங்கு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளா யானைகளும் இடம்பெயர்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம்,' என்றனர்.
27-Dec-2025