மேலும் செய்திகள்
பெண்களிடம் அத்துமீறல்; இளைஞர் கைது
31-Jul-2025
பந்தலுார்; பந்தலுார் அருகே கோட்டைப்பாடி பகுதியில் வீட்டு கதவை, தட்டிய யானையால் வீட்டினுள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பந்தலுார் அருகே சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கோட் டைப்பாடி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்கு வந்த ஒற்றை யானை, வீட்டு வாசலில் சில மணி நேரம் நின்று இருந்தது. பின்னர் வீட்டு கதவின் அருகே சென்று தட்டி உள்ளது. யானை வீட்டிற்கு முன்பாக வருவதை 'சி.சி.டி.வி' கேமராவில் வீட்டினுள் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், வனக்குழுவினர் அப்பகுதிக்கு வந்து யானையை அங்கிருந்து விரட்டினர். யானை வீட்டு கதவை தட்டும் 'வீடியோ' தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
31-Jul-2025