உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டயாலிஸ் மைய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

டயாலிஸ் மைய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா

பந்தலூர்: பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் டயாலிஸ் மைய கட்டட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. எருமாடு தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், கருணை டயாலிஸ் மைய தலைவர் அப்துல்மஜீத் தலைமை வகித்து பேசுகையில், ''பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன்பு, சிறுநீரக கோளாறால் பலர் சிரமப்பட்டனர். அவர்களின் வேதனை மற்றும் அந்த குடும்பத்தினருக்கு உதவிட, தன்னார்வலர்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்புடன், கருணை டயாலிஸ் மையம் துவக்கப்பட்டது. சொந்த கட்டடம் கட்ட முயற்சி மேற் கொள்ளப்பட்டு, 2 கோடி ரூபாய் செலவில் கட்டடம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.'' என்றார் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், தனல் அறக்கட்டளை டாக்டர் சுரபி ஆகியோர் அடிக்கல் நாட்டும் பெயர் பலகையை திறந்து வைத்தனர். இலவசமாக நிலத்தை வழங்கிய எல்தோ குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி