உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

ஊட்டி: கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனை சார்பில், ஊட்டி சாந்தி விஜய் பள்ளியில், நாளை இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது.முகாமில், இதயம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை, புற்றுநோய், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ சிகிச்சைகள், காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சைகளுக்கு, மருத்துவ குழுக்களால் இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு அடர்த்தி ஆகியவற்றுக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்படும். ஊட்டி சாந்தி விஜய் மேல்நிலைப் பள்ளியில் காலை, 9:30 மணி முதல் பிற்பகல், 1:30 மணி வரை நடக்கும் முகாமில் பங்கேற்று மக்கள் பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை