உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்லுாரி விளையாட்டு போட்டி; மாணவியர் அசத்தல்

கல்லுாரி விளையாட்டு போட்டி; மாணவியர் அசத்தல்

குன்னுார்; குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் நடந்த, விளையாட்டு போட்டிகளில் மாணவியர் அசத்தினர்.குன்னுார் பிராவிடன்ஸ் தன்னாட்சி கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா பங்கேற்று பேசினார்.மாணவியரின் பேண்ட் வாத்திய இசையுடன் அணிவகுப்பு மற்றும் ஒலிம்பிக் ஜோதி இடம்பெற்றது. உடற்கல்வி இயக்குனர் கவிதா ஆண்டு விளையாட்டு அறிக்கையை வாசித்தார். 100 மீ., 200 மீ., மற்றும் தொடர் ஓட்டம் நடந்தது. அதில், முதலாமாண்டு மாணவி ஷீபா, 100 மீ., 200 மீ; ஓட்டத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு, 2024-25ம் ஆண்டிற்கான சிறந்த தடகள வீரர் விருது வழங்கப்பட்டது.தொடர்ந்து, மாணவியருக்கு மாநில அளவிலான பிரதிநிதித்துவ விருதுகள் வழங்கப்பட்டன. 2ம் ஆண்டு மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை பெற்றனர். அணிவகுப்பில், 3ம் ஆண்டு மாணவி, சிறந்த அணிவகுப்புக்கான கேடயத்தை பெற்றனர். மாணவியரின் கராத்தே, சாகச நிகழ்ச்சிகள், படுக நடனம் போன்றவை இடம் பெற்றன. உடற்கல்வி இயக்குனர் டாக்டர் கவிதா குமரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை