சாலையோரம் குவியும் குப்பைகள்; சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்பு
கூடலுார் ; கூடலுார் பகுதியில் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவதற்கு நகராட்சி தடை செய்துள்ளது. எனினும், சில பகுதிகளில் தொடர்ந்து திறந்த வெளியில் குப்பைகள் கொட்டி வருகின்றனர்.இந்நிலையில், மேல் கூடலுார் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரம், திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், மழைநீர் வழிந்தோட தடையும் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதிப்பை கருத்தில் கொண்டு சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றுவதுடன், மீண்டும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.