உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  குப்பையால் கொசுத்தொல்லை நோய் பரவும் அபாயம்

 குப்பையால் கொசுத்தொல்லை நோய் பரவும் அபாயம்

கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை கிராம வீதிகளில் குப்பை குவிந்துள்ளதால், கொசு தொல்லை அதிகரித்து. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னதலை கிராமத்தில், 200 குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர். கிராம பொது இடங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து காணப்படுகிறது. மேலும், பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் அடைப்பட்டு, கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றத்துடன் கொசு தொல்லை அதிகரித்து, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, கிராமத்தில் வரும், 20 நாட்களில் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற உள்ளதால், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். துர்நாற்றத்தில் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே, திருவிழாவுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட நிர்வாகம், குப்பைகளை அகற்றுவதுடன், கழிவுநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ