எரிவாயு தகன மேடை: பணிகளை விரைந்து முடித்தால் பயன்
கூடலுார்,: கூடலுார் நகராட்சி சார்பில், காலம்புழா பகுதியில் எரிவாயு தகனம் மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொடர் பராமரிப்பு இல்லாததால், இவை அவ்வப்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.நடப்பாண்டு, சில மாதங்களுக்கு முன் பெய்த பலத்த மழையின் போது, தகன மேடையின் புகை கூண்டு சாய்ந்து சேதமடைந்தது. இதனால், தகன மேடை மூடப்பட்டது. இறந்தவர்கள் உடலை எரியூட்ட முடியாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.தொடர்ந்து நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, சேதமடைந்த புகை கூண்டு சீரமைக்கப்பட்டது. எனினும், அவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், இறந்தவர்கள் உடலை எரியூட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சேதமடைந்த எரிவாயு தகன மேடையை, விரைவாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் அப்பகுதி வளாகத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி பூந்தோட்டம் அமைக்க வேண்டும்,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'மழையின் போது சேதமடைந்த புகை கூண்டு சீரமைக்கப்பட்டுள்ளது. உடலை எரியூட்ட கூடிய பகுதியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.