உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதுப்பொலிவுடன் கண்ணாடி மாளிகை: காட்சிபடுத்தப்பட்ட பெரணி செடிகள்

புதுப்பொலிவுடன் கண்ணாடி மாளிகை: காட்சிபடுத்தப்பட்ட பெரணி செடிகள்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை சுற்றுலா பயணியர் பார்வைக்கு திறக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், கோடை சீசனுக்காக, 250 ரகங்களில் பல லட்சம் மலர்கள் தயார்படுத்தும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. குறிப்பாக, இத்தாலியன் பூங்கா, முகப்பு புல் தரை, கண்ணாடி மாளிகைகள், பெரணி இல்லம் உள்ளிட்டவைகள் புது பொலிவுடன் காட்சி அளிக்கப்படுகிறது.அதில், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில், கடந்த சில மாதங்களாக நடந்த பராமரிப்பு பணி தற்போது நிறைவடைந்தது. அங்கு, கள்ளி செடிகளின் வகைகள் மற்றும் குட்டை ரகமான போன்சாய் மரங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது.மேலும், பூவா தாவரங்கள் என்ப்படும் பெரணி செடிகள் சீசனுக்காக காட்சிபடுத்தப்பட்டன. இதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை