உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆடிபெருக்கு விழாவில் ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்காரம்

ஆடிபெருக்கு விழாவில் ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்காரம்

கூடலுார்; ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு, மேல் கூடலுார் சந்தைக்கடை மாரியம்மன் கோவில், ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்காரம் நடந்தது. கூடலுார் பகுதியில் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு, கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்து. மேல் கூடலுார் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் காலை சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ரூபாய் நோட்டுகளால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். பூஜை செய்து புதுமண தம்பதிகளுக்கு, பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. சில தம்பதிகள் கோவிலில் வளாகத்தில் அமர்ந்து, தாலி கயிறு மாற்றி கொண்டனர். இதேபோன்று, மாலை வீடுகளில் பூஜை செய்து பெண்கள் தாலி கயிறு மாற்றி கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ