உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ரூ.6.58 கோடி மதிப்பீட்டில் தோழி விடுதி: அரசு கொறடா அடிக்கல் நாட்டினார்

 ரூ.6.58 கோடி மதிப்பீட்டில் தோழி விடுதி: அரசு கொறடா அடிக்கல் நாட்டினார்

ஊட்டி: ஊட்டியில், 70 படுக்கை வசதியுடன், 6.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோழி விடுதி அடிக்கல் நாட்டப்பட்டது. மாநில முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருப்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில், தோழி விடுதி அமைக்க அடிக்கல் நாட்டினார். அதன்படி, மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், 6.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோழி விடுதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி மற்றும் பூமி பூஜை நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பல்யா முன்னிலையில், அரசு தலைமை கொறடா ராமச் சந்திரன், அடிக்கல் நாட்டில் பணியை துவக்கி வைத்து கூறியதாவது: மாநில முதலமைச்சர், மகளிர் உரிமைத்துறை சார்பில், நீலகிரி மாவட்டம் உட்பட, 12 மாவட்டங்களில் தோழி விடுதி கட்டு வதற்கான பணி களுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் வாயிலாக, 740 பணிபுரியும் மகளிர் பயன் பெறுவர். நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலக வளா கத்தில், 6.58 கோடி மதிப்பீட்டில் தரைத்தளத்தில், 30 மேல் தளத்தில், 40 என, மொத்தம், 70 படுக்கை வசியுடன், புதிய தோழி விடுதி கட்டுப்பட்ட உள்ளது. இதற்கான பணி துவக்கி வைக்கப்பட்டது. இந்த விடுதி,பிற மாவட்டங்களில் இருந்து, நீலகிரியில் தங்கி பணியும் பெண்களுக்கு பயனுள்ளதாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக நிர்வாக பொறியாளர் சீனி வாசன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பிரம்ம வித்தியநாயகி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை