ஜெ.எஸ்.எஸ்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஊட்டி; ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் பல்வேறு பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. சாதித்த மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் தனபால் பேசுகையில், ''பட்டம் பெற்ற மாணவர்கள் மருத்துவத்துறையில் எதிர்காலத்தை வடிவமைக்க போகும் நபர்கள். இவர்கள் அனைவரும், சமூக நலனுக்காக பணியாற்றும் மனப்பான்மையுடன் முன்னேற வேண்டும். இந்த விழா கல்லுாரி வாழ்க்கையின் ஒரு முக்கிய கட்டமாக மட்டுமல்லாமல் வாழ்க்கை பயணத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் நிகழ்வாகவும் அமைந்தது. எதிர்கால மருந்தாளர்களுக்கு வாழ்த்துக்கள,'' என்றார்.