உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

நீலகிரி கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

பந்தலுார் : பந்தலுார் அருகே தாளூரில் செயல்படும், நீலகிரி கலை அறிவியல் கல்லுாரியில், 9-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது. கல்லுாரி முதல்வர் முனைவர் பாலசண்முகதேவி வரவேற்று கல்லுாரியின் செயல்பாடுகள் மற்றும் பட்டமளிப்பு விழா குறித்து பேசினார்.பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரான ராஷித்கசாலி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, 'கல்வியின் முக்கியத்துவம் மற்றும் கல்லுாரியில் சிறந்த முறையில் படிக்கும் மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகள்,' குறித்து பேசினார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்தி ஸ்ரீ துலிபுடிபண்டிட், கேரளா டிஜிட்டல் பல்கலைக்கழக துணைவேந்தர் சசி கோபிநாத் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்,நிகழ்ச்சியில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த, 755 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். பல்கலைக்கழக தேர்வுகளில் முதல் மற்றும் தங்க பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் விருது வழங்கி கவுரவிக்கபட்டது. துணை முதல்வர் ரஞ்சித், கல்லுாரி டீன் மோகன் பாபு, வளாக மேலாளர் உம்மர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ