உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

குன்னுார்:குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள ஹோலி இன்னசென்ட் பள்ளியில் படிப்பில் சிறந்து விளங்கிய பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. மாணவ, மாணவியரிடையே தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் நடந்த இந்த விழாவிற்கு கோவை குருமடம் நல் ஆயர் அருட்தந்தை மரிய சேவியர் ஞானதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்கள் வழங்கி பேசினார்.பள்ளி தலைமையாசிரியர் ஆவியா வாஸ் வரவேற்றார். மாணவி கல்பிகா பரதநாட்டியம் அரங்கேற்றினார். அருட் சகோதரி ஹெரினா ஷெலின், ஆசிரியர் பிளோரா எஸ்தர் உட்பட பலர் பேசினர்.36 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள், நினைவு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ரூபி மார்கரெட் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ