மேலும் செய்திகள்
தங்கள் குறைகளை சொல்ல விவசாயிகளுக்கு அழைப்பு
26-Sep-2024
கூடலூர் : கூடலுாரில் நாளை நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.கூடலுார் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, மாதந்தோறும் வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூடலுார் வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், 10ம் தேதி, மதியம் 3:30 மணிக்கு, கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது. அனைத்து துறை அரசு அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே, விவசாயிகள், கூட்டத்தில் பங்கேற்று வேளாண்மை சார்ந்த கோரிக்கைகளை நேரடியாக மனு கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Sep-2024