உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குறை தீர்க்கும் கூட்டம்: விவசாயிகள் பங்கேற்பு

குறை தீர்க்கும் கூட்டம்: விவசாயிகள் பங்கேற்பு

கூடலூர்: கூடலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர். கூடலூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கூடலூர் ஆர்.டி.ஓ., குணசேகரன் தலைமை வகித்து, அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறித்து விளக்கி, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை, நீர்வளத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, ஊரக வளர்ச்சித் துறை, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய துறை அதிகாரிகள் பங்கேற்று, தங்கள் துறைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினர். கூட்டத்தில், அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ