உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாதனைக்கான சிலம்பாட்டம்: பள்ளி மாணவர்கள் ஆர்வம்

சாதனைக்கான சிலம்பாட்டம்: பள்ளி மாணவர்கள் ஆர்வம்

குன்னுார்: குன்னுார் பிருந்தாவன் பப்ளிக் பள்ளியில், 'கலாம்' உலக சாதனைக்காக, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், 79 நிமிடங்கள் சிலம்பாட்டத்தில் ஈடுபட்டு சாதனை புரிந்தனர். குன்னுார் பிருந்தாவன் பப்ளிக் பள்ளி மற்றும் கோவை வெற்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் கலாம் உலக சாதனைக்காக சிலம்பம் போட்டி பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. அதில், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியை பள்ளி முதல்வர் டாக்டர் கிளாடிஸ் டயானா சிவகுமார் துவக்கி வைத்தார். குன்னுார், கரூர் வைசியா வங்கி மேலாளர் கணேசன் மற்றும் சென்னை கலாம் உலக சாதனை குழுவினர் பங்கேற்றனர். 'மரங்களை பாதுகாப்போம்' என்ற தலைப்பில், 79வது சுதந்திர தின விழாவிற்காக, 79 நிமிடங்களில் சிறு குழந்தைகள், பிளஸ்-2 வரையிலான மாணவ, மாணவிகள் தொடர்ந்து சிலம்பாட்டத்தில் ஈடுபட்டு சாதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் பள்ளி குழுவினருக்கு வழங்கப்பட்டன. பல்வேறு போட்டி களும் நடத்தி கேடயம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை ஒருங்கிணைப்பு குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி