மேலும் செய்திகள்
திருமுக்கூடல் பாலாற்று பாலத்தில் மண் குவியல்
26-Nov-2024
கோத்தகிரி; கோத்தகிரி - கோடநாடு இடையே, விரிவுபடுத்தப்பட்ட சாலையில், மண் குவியல் அகற்றப்படாமல் உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.கோத்தகிரி - கோடநாடு சாலை மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, சாலை வளைவுகள், தடுப்பு சுவருடன் விரிவுபடுத்தப்பட்டது. இச்சாலை வழியாக, கோடநாடு, கீழ் கோத்தகிரி, சோலுார்மட்டம், கெங்கரை, தேனாடு, துானேரி மற்றும் இடுக்கரை உட்பட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. தவிர, பள்ளி வாகனங்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான தனியார் வாகனங்களும் சென்று வருவதால், நாள்தோறும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.இந்நிலையில், புதுார் பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக, கொட்டப்பட்ட மண் குவியல், நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், கனரக வாகனங்கள் சென்று வரும்போது ஒதுங்க முடியாத நிலை உள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறை விரிவுபடுத்தப்பட்ட சாலையில், மண் குவியலை அகற்றி, கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்.
26-Nov-2024