உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கொட்டி தீர்த்த கனமழை சாலையில் தேங்கிய வெள்ளம்

கொட்டி தீர்த்த கனமழை சாலையில் தேங்கிய வெள்ளம்

குன்னுார்: குன்னுாரில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் வெள்ளம் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர்.குன்னுார் பகுதியில், நேற்று முன்தினம் மாலையில் கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளிலும், நீரோடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முறையான கால்வாய் வசதி ஏற்படுத்தாத இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.குறிப்பாக, ஸ்டான்லி பார்க் பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் முறையாக மேற்கொள்ளாததால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.பள்ளி முடித்து செல்லும் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மக்கள் கூறுகையில்,'நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முழுமையாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ