உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரியில் கனமழை காய்கறி தோட்டம் மூழ்கியது

கோத்தகிரியில் கனமழை காய்கறி தோட்டம் மூழ்கியது

குன்னுார்: கோத்தகிரியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழைக்கு, 50 ஏக்கர் காய்கறி தோட்டம், வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் மூன்று நாட்களாக இரவில் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை வரை, எடப்பள்ளியில் அதிகபட்சமாக, 11.3 செ.மீ., குன்னுார், 9.5 செ.மீ., மழையளவு பதிவானது. வண்டிச்சோலை, பெட்போர்டு, அம்பிகாபுரம், பாலவாசி உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. டால்பின் நோஸ், கிளண்டேல், கரும்பாலம், உபதலை உட்பட ஆறு இடங்களில் விழுந்த மரங்களை குன்னுார் தீயணைப்பு துறையினர் அகற்றினர். கோத்தகிரி அருகே, நெடுகுளா - காவிலோரை இடையே, 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள காரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டை கோஸ் உள்ளிட்ட மலை காய்கறி தோட்டத்திற்குள் மழைநீர் புகுந்து, அறுவடைக்கு தயாரான பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை