தலை கவசம் அவசியம்; கூடலுாரில் விழிப்புணர்வு பேரணி
கூடலுார்; கூடலுாரில் விபத்துகளை தவிர்க்க தலை கவசம் அணிந்து, சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.கூடலுாரில், போக்குவரத்து போலீஸ் துறை சார்பில், சாலை விபத்துகளை தவிர்க்க, தலை கவசம் அணிந்து சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி அலுவலகம் அருகே துவங்கிய பேரணியை, ஆர்.டி.ஓ., செந்தில்குமார், டி.எஸ்.பி., வசந்தகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, தலை கவசம் அணிந்து இரு சக்கர வாகன பேரணி நடந்தது. இந்த பேரணி, ஊட்டி மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று, கோழிக்கோடு சாலை துப்புகுட்டிபேட்டை பகுதியில் நிறைவு பெற்றது.பேரணியில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபாகரன், போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.