உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குந்தை சீமையில் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

குந்தை சீமையில் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

ஊட்டி; மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள படுகரின கிராமங்களில் ஹெத்தை அம்மன் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரியில் படுகர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆண்டு தோறும் ஜன., மாதம் ஹெத்தை அம்மன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா பல்வேறு கிராமங்களில் கடந்த இரு வாரங்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் குந்தை சீமைக்கு உட்பட்ட குந்தா துானேரி, மஞ்சூர் ஹட்டி உள்ளிட்ட பல்வேறு படுகர் இன கிராமங்களில் நடந்தது. குந்தா துானேரி கிராமத்தில் ஊர் தலைவர் ராமன் தலைமையில், கிராம மக்கள் ஒன்றிணைந்து அலங்கரிக்கப்பட்ட ஹெத்தை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. கிராம மக்கள் ஹெத்தை அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் திரளான மக்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து, பாரம்பரிய உடை அணிந்து நடனம், பஜனை நிகழ்ச்சி நடந்தது. அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், மஞ்சூர் ஹட்டி கிராம மக்கள் சார்பில் நடந்த ஹெத்தை அம்மன் திருவிழாவில் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள படுகரின மக்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை