உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  குன்னுாருக்கு வந்த உலக ஹாக்கி கோப்பை: உற்சாக வரவேற்பு அளித்த ஆர்வலர்கள்

 குன்னுாருக்கு வந்த உலக ஹாக்கி கோப்பை: உற்சாக வரவேற்பு அளித்த ஆர்வலர்கள்

குன்னுார்: சென்னை, மதுரையில் நடக்கும் உலக ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான, வெற்றி கோப்பை, குன்னுாருக்கு கொண்டுவரப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை மற்றும் மதுரையில், 14வது ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை போட்டி நவ., 28 முதல் டிச., 10 வரை நடக்கிறது. இதற்கான வெற்றி கோப்பை, தமிழக முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, குன்னுார் வெலிங்டன் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிருந்தாவன் பகுதியில் இருந்து மாணவ, மாணவியர் பேண்ட் இசை இசைக்க, விளையாட்டு வீரர்கள், போலீசார், அரசியல் கட்சியினர் ஊர்வலத்துடன் வெலிங்டன் வாரிய மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த வரவேற்பு விழாவில், அரசு கொறடா ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ''நீலகிரியில் ஹாக்கி ஆர்வலர்கள் அதிகமாக உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஹாக்கி விளையாடி வருகின்றனர். பேரட்டி பகுதியில் உள்ள, 5.5 ஏக்கர் நிலத்தில், உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நில மாற்றத்திற்காக உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் மைதானம் கொண்டுவரப்படும்,'' என்றார். விழாவில், ஊட்டி, குன்னுார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஹாக்கி கோப்பை முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன், குன்னுார் அருவங்காடு இன்ஸ்பெக்டர்கள், உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஹாக்கி நீலகிரிஸ் அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன், துணைத் தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ