உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மண் சரிவால் வீடுகள் பாதிப்பு; சீரமைப்பு பணியில் ஊழியர்கள்

மண் சரிவால் வீடுகள் பாதிப்பு; சீரமைப்பு பணியில் ஊழியர்கள்

பந்தலுார்; பந்தலுார் பகுதியில் பெய்த மழையில், மண் சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் பாதிக்கப்பட்டது. பந்தலுார் பகுதியில் இரும்பு பாலம் என்ற இடத்தில் சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. அதில், சிறு பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் இளங்கேஸ்வரன் மற்றும் பிரமிளா ஆகியோரின் வீடுகள் முன்பாக மண் நிறைந்தது. இளங்கேஸ்வரன் வீட்டு சு வர் விரிசல் அடைந்தது. மேல் பகுதியில் மரங்கள் மற்றும் மண் பாறைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளதால், தொடர்ந்து மழை பெய்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை தாசில்தார் சிராஜுநிஷா, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், நகராட்சி ஆணையாளர் சக்திவேல், கவுன்சிலர் சாந்தி உள்ளிட்டோர் ஆய் வு செய்தனர். மேலும், முதல் கட்டமாக நகராட்சி மரங்கள் மற்றும் புதர் செடிகள் வெ ட்டி அகற்றப்பட்டு, வீடுகள் மற்றும் சாலையில் மண் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர் மழை பெய்தால் இரண்டு வீட்டிலும் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல, அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை