உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; இலவச நீர் மோர் பந்தல் துவக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; இலவச நீர் மோர் பந்தல் துவக்கம்

குன்னுார்; குன்னுாரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இலவச நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.குன்னுார் பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே குடிநீர் பாட்டில்கள், தடை விதிக்கப்பட்டதால் குடிநீருக்கு பலரும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், பீசலு பவுண்டேஷன் மற்றும் சத்ய சாய் சேவா மாருதி அறக்கட்டளை சார்பில், குன்னுார் மவுண்ட் ரோடு அண்ணா சிலை அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு, துவக்க விழா நடந்தது. பீசலு பவுண்டேஷன் நிறுவன தலைவர் ஷாலினி, உறுப்பினர் துரைராஜ், தன்னார்வலர் முபாரக், சாய் அறக்கட்டளையை சேர்ந்த வருண் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.வரும் மே மாதம் இறுதி வரை, இலவசமாக மக்களுக்கு நீர் மோர் உட்பட தர்பூசணி உட்பட பழங்கள் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி