உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடைகளில் விலை பட்டியல் வைக்க வலியுறுத்தல்

கடைகளில் விலை பட்டியல் வைக்க வலியுறுத்தல்

பந்தலூர்: தமிழக எல்லையான சேரம்பாடி பகுதியில், கடைகளில் விலை பட்டியல் வைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் அம்சா தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜாவிற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது, தமிழக எல்லை பகுதியாக உள்ளது பந்தலூர் அருகே சேரம்பாடி. இங்கு உள்ள கடைகளில் வியாபாரிகள், தங்கள் விருப்பம் போல் விலைகளை வைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் சுற்றுலா வரும் பயணிகள், இந்த பகுதியில் பொருட்கள் வாங்கும் போது விலை மாறுபாட்டால் பாதிக்கப்படுவதுடன், உள்ளூர் மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பை தவிர்க்க அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஹோட்டல்களில் அதிகரிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய அறிவுரை வழங்குவதுடன்,பாதசாரிகள் நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து, கடைகள் செயல்படுவதை தவிர்க்கவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை