உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியினருக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தல்

பழங்குடியினருக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தல்

பந்தலுார் : பந்தலுார் அருகே அய்யன் கொல்லி பகுதியில், நீலகிரி ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.மூத்த நிர்வாகி அச்சுதன் வரவேற்று பேசுகையில், ''பண்டைய காலங்களில் பழங்குடியின மக்களுக்காக, போராட்டம் நடத்தி சிறை சென்ற அனுபவங்கள் உண்டு. ஆனால், தற்போது பழங்குடியின இளைய தலைமுறை, நம் சமுதாயத்தை காப்பாற்றவும், அரசின் திட்டங்களை பழங்குடியின மக்களுக்கு சென்று சேர்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.அமைப்பின் தலைவர் கண்ணன் தலைமை வகித்து பேசியதாவது:நீலகிரி மாவட்டத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறோம். பழங்குடியின மக்களுக்கு கட்டப்படும் கான்கிரீட் தொகுப்பு வீடுகள், விரைவில் பழுதடையும் நிலையில், ஓடு வேயப்படும் வீடுகள் கட்டித்தர அரசு முன்வர வேண்டும்.தரமான கல்வி கிடைக்க பந்தலுாரில் ஏகலைவா பள்ளி ஏற்படுத்தவும், அரசு பழங்குடியினர் பள்ளிகளை, பொது பள்ளியாக மாற்ற வேண்டும்.வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கவும், போலி சான்றிதழ்கள் வழங்குவதை தடுக்க வேண்டும். வன உரிமை சட்டபடி ஒவ்வொரு குடும்பத்திற்கும், 2- ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். அதேபோல் பழங்குடியின மக்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும்,சுய தொழில் ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.கூட்டத்தில், செயலாளர் நீலகண்டன், பொருளாளர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நிர்வாகி கைமதாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை