உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடுதல் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தீவிரம்

கூடுதல் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி; ஊட்டி ஏ.டி.சி., பகுதியில், கூடுதலாக தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பழைய கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்ட பணிக்காக, 18 கோடி ரூபாய் நிதி மூலம் பழைய கடையில் இடிக்கப்பட்டு, புதிய கடைகளுக்கான கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. கடை வியாபாரிகளுக்காக ஏ.டி.சி., பகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் இடத்தில், தற்காலிக கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அங்கு முதற்கட்டமாக, 180 தற்காலிக கடைகள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, இரண்டாம் கட்டமாக பழைய கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகளுக்கான கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. அங்கு, கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு தற்காலிக கடைகள் ஒதுக்க வேண்டும் என்பதற்காக, ஏ.டி.சி., பகுதியில் ஏற்கனவே தற்காலிக கடைகள் அமைத்த இடத்தில் கூடுதலாக தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !