உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்தில் புற்கள் வளர்க்கும் பணி தீவிரம்; தாவர உண்ணிகள் உணவு தேவைக்கு தீர்வு

வனத்தில் புற்கள் வளர்க்கும் பணி தீவிரம்; தாவர உண்ணிகள் உணவு தேவைக்கு தீர்வு

கூடலுார் : கூடலுார் அருகே உண்ணி செடிகள் அகற்றப்பட்ட, 167 ஏக்கர் வனப்பகுதியில், தாவர உண்ணிகளின் உணவு தேவை பூர்த்தி செய்யும் வகையில், புற்கள் நடவு செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.கூடலுார் வன கோட்டத்தில், யானை, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட தாவர உண்ணிகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில், வனப்பகுதியில் எந்த பயனும் இல்லாத உண்ணி செடிகள், வளர்ந்து வனவிலங்குகள் விரும்பி உண்ணக்கூடிய தாவரங்கள், வளர இடையூறாக உள்ளது.இதற்கு தீர்வு காண, கூடலுார் வனச்சரகம், பாடந்துறை, வாச்ச கொல்லி வனப்பகுதியில், 167 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள உண்ணி செடிகளை, வனத்துறையினர் கடந்தாண்டு வேருடன் அகற்றினர். அப்பகுதியில் யானை உள்ளிட்ட தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக்கூடிய, புற்கள், விதைகளை துாவியத்துடன், புற்களின் தண்டுகள் மற்றும் நெல்லி, நாவல் போன்ற பழச் செடிகளையும் நடவு செய்யும் பணியில், பழங்குடியினர் ஈடுபட்டுள்ளனர்.இப்பணிகளை, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனச்சரகர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் தாவர உண்ணிகளின் உணவு தேவை பூர்த்தி செய்யும் வகையில், பயனற்ற உண்ணி செடிகளை அகற்றி, தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக்கூடிய புற்கள், தாவரங்கள் நடவு செய்யும் பணி மேற்கொண்டு வருகிறோம்.இதேபோன்று மற்ற பகுதிகளிலும், உண்ணி செடிகள் அகற்றப்பட்டு புற்கள், தாவரங்கள் நடவு செய்யும் பணி தொடரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை