உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஐந்து வழித்தடங்களில் மினி பஸ்: விண்ணப்பிக்க அழைப்பு

ஐந்து வழித்தடங்களில் மினி பஸ்: விண்ணப்பிக்க அழைப்பு

ஊட்டி: நீலகிரி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட, 5 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: ஊட்டி ஏ.டி.சி., முதல் முட்டிநாடு; குன்னுார் முதல் பில்லுார் மட்டம்; ஊட்டி ஏ.டி.சி., முதல் எம். பாலாடா; ஊட்டி மார்க்கெட் பஸ் ஸ்டாண்ட் முதல் குருசடி காலனி; ஊட்டி மார்க்கெட் பஸ் ஸ்டாண்ட் முதல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, வழித்தடத்திற்கு மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ஐந்து வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விரும்புவோர் வழித்தட விபரத்தை குறிப்பிட்டு ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை