மேலும் செய்திகள்
வீட்டை நோட்டமிட்ட கட்டை கொம்பனால் அச்சம்
20-Dec-2025
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2025
வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டம்
20-Dec-2025
ஊட்டி;மாவட்டத்தில், புதிரை வண்ணார் சமூக மக்களின் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது.ஆதிதிராவிடர் நலத்துறை தலைமையில், புதிரை வண்ணார் சமூக மக்களின் பொருளாதார நிலையை கண்டறிவதற்காக, மாநிலம் முழுவதும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்காக 'இப்சோஸ்' ஆராய்ச்சி நிறுவனத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரகம் நியமித்துள்ளது.இந்நிலையில், ஊட்டியில் கலெக்டரை சந்தித்த குழுவினர், ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் செயல்முறைகள் குறித்து விளக்கினர். இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதை உறுதி செய்ய ஏதுவாக, அனைத்து கிராமங்களிலும் கணக்கெடுப்பு குறித்து தகவல்கள் எடுத்து செல்ல ஆதரவு கேட்கப்பட்டது. கணக்கெடுப்பு குழு, ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, கிராமம் மற்றும் குடும்ப அளவிலான கணக்கெடுப்பை நடத்தி, அவர்களிடம் நேரடியாக தகவல்களை பெற்று ஆய்வு செய்யும்.நீலகிரியில் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் மற்றும் தரவுகள் புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்த உதவும்.கலெக்டர் கூறுகையில், ''புதிரை வண்ணார் சமூக மக்களின் விபரங்கள் நேரடி கள ஆய்வு மேற்கொள்வதால், அவர்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்க, துல்லியமான ஆய்வு முடிவுகளை 'இப்சோஸ்' நிறுவனம் வழங்குகிறது. இந்த பணிக்கு குறிப்பிட்ட சமூக மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025