விடுபட்ட பார்க்கிங் தளம்; விரிவு படுத்தினால் நலம்
கோத்தகிரி; கோத்தகிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில், விடுபட்ட பகுதியை 'பார்க்கிங்' தளம் அமைத்தால், வாகனங்கள் நிறுத்த ஏதுவாக அமையும்.கோத்தகிரி பேரூராட்சி அலுவலகம் வளாகத்தில், இடிந்த தடுப்பு சுவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீரமைக்கப்பட்டு பார்க்கிங் தளம் அமைக்கப்பட்டது. இதனால், வாகனங்கள் சிரமம் இன்றி நிறுத்தப்படுகிறது. இதனால், சாலை ஓரத்தில், போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. விரிவு படுத்தப்பட்ட பகுதியில், பணி முழுமை பெறாமல் பாதியில் விடப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட இடத்தில், தடுப்பு சுவர் அமைக்காததால், வாகனங்கள் பள்ளத்தில் கவிழும் நிலை உள்ளது.எனவே, பேரூராட்சி நிர்வாகம், விடுபட்ட இடத்தில், தடுப்பு சுவர் அமைத்து, தளம் அமைக்கும் பட்சத்தில், மேலும், 10க்கும் மேற்பட்ட, வாகனங்கள் நிறுத்த ஏதுவாக அமையும். அத்துடன் நெரிசல் இருக்காது.