உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜல்ஜீவன் திட்டத்தின் குடிநீர் கட்; காட்டேரி பொதுமக்கள் பாதிப்பு

ஜல்ஜீவன் திட்டத்தின் குடிநீர் கட்; காட்டேரி பொதுமக்கள் பாதிப்பு

குன்னுார்; குன்னுார் காட்டேரி பூங்கா பகுதியில், 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்துள்ளனர். குன்னுார் காட்டேரி பூங்கா அருகே, 125 குடும்பங்கள் வசித்து வருகின்றன. வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில், குடிநீர் கிடைக்காமல், மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். உபாசி வேளாண் ஆராய்ச்சி மையத்திற்கு உட்பட்ட இடத்தில் இருந்து வரும் ஊற்று நீரில் இருந்து ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், 'இங்கு சிலரால், விவசாயத்திற்காக, தண்ணீர் தடுக்கப்படுவதால், குழாய்களில் சரிவர குடிநீர் கிடைப்பதில்லை,' என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் கொடுத்த நிலையில், லாஸ் நீர்வீழ்ச்சி பகுதி அருகே உள்ள ஊற்று நீரில் இருந்து குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த போதும் , மக்களுக்கு முழு பயனில்லாத வகையில் உள்ளது. இதனால், பணிக்கு செல்லும் மகளிர் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். ஊராட்சியில் தெரிவித்த போதும், அதிகாரிகள் தீர்வு காணவில்லை. எனவே, கிராமத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தில் அமைக்கப்பட்ட குழாய்களில் இருந்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை