நகை கடையில் திருடியவர் கைது
பாலக்காடு,; பாலக்காடு நகரில் உள்ள நகைக்கடையில் மூன்று சவரன் தங்க நகையை திருடிய வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மார்க்கெட் ரோட்டில் செயல்படுகிறது பார்கவி தங்க நகை கடை. இங்கு, கடந்த 13ம் தேதி மனைவிக்கு பரிசு அளிப்பதற்கு தங்க செயின் வாங்குவது போல் வந்த நபர், மூன்று சவரன் தங்க செயினை திருடிச்சென்றார். நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், பாலக்காடு டவுன் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எஸ்.ஐ., அஜாசுதீன் தலைமையிலான போலீஸ் படையினர் சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், தங்க செயினை திருடியது திருச்சூர் மாவட்டம், வடக்காஞ்சேரி ஓட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்த இமானுவேல், 32, என்பது தெரிந்தது. தொடுபுழா பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.