மண்டல அளவிலான தடகள போட்டி ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி சாம்பியன்
கோத்தகிரி:கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அளவிலான தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் வென்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட, நான்கு மண்டலங்களுக்கு இடையேயான ஆங்கில பள்ளிகளுக்கு இடையே, குன்னுார் ராணுவ கல்லுாரி மைதானத்தில் தடகள போட்டி நடந்தது. போட்டியை, கோத்தகிரி ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி நடத்தியது. இதில், நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட, 69 ஆங்கில பள்ளிகளில் இருந்து, 622 வீரர்கள் பங்கேற்றனர். இதில், கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி ஆண்கள் பிரிவில், 67 புள்ளிகள், பெண்கள் பிரிவில், 77 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் வென்று, 50 புதிய சாதனைகள் படைத்தனர். குன்னுார் ராணுவ கல்லுாரி கர்னல் அவினாஷ் ராணா, மண்டல ஒருங்கிணைப்பாளர் சரோ தன்ராஜ் வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். முதல் இரண்டு இடங்கள் வெற்றி பெற்ற மாணவர்கள், அடுத்த மாதம் நடைபெறும் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர்.