உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் கராத்தே போட்டி; மாணவர்களுக்கு பாராட்டு

ஊட்டியில் கராத்தே போட்டி; மாணவர்களுக்கு பாராட்டு

ஊட்டி; தேசிய அளவிலான கராத்தே தேர்வு, போட்டியில் ரெக்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். ஊட்டியில் ரெக்ஸ் பள்ளியில், உலக யூனைட்டட் கராத்தே சங்கத்தின் 'பிளாக் பெல்ட்' பிரிவுக்கான போட்டி நடந்தது. அதில், 7ம் வகுப்பு லேவியன் ஆண்டனி தேர்ச்சி பெற்றார். இதை தொடர்ந்து, தேசிய கராத்தே போட்டி நடந்தது, போட்டியில், 12 மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர். அனைவருக்கும் பள்ளி தாளாளர் லாரன்ஸ், முதல்வர் இதயா ஆகியோர் பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை கராத்தே சங்க இயக்குனர் நரேஷ் பாபு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ