கர்நாடகா பூங்கா பொலிவு; பயணிகளை ஈர்க்க முடிவு
ஊட்டி; ஊட்டி கர்நாடகா பூங்கா, சீசனுக்காக பொலிவாகி உள்ளதால், பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.ஊட்டி பர்ன்ஹில் பகுதியில், கர்நாடகா மாநிலம் தோட்டக்கலை துறை சார்பில், 100 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பூங்காவில் அழகிய தொங்கு பாலம் அமைக்கப்பட்டு, 300 வகையான உயர்ரக மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, தற்போது பூத்து குலுங்குகிறது. அழகிய புல்தரையுடன், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீர்வீழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.இதனால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், கர்நாடகா பூங்கவின் அழகை கண்டு களிக்க தவறுவதில்லை. நடப்பாண்டு, மார்ச் மாதம் துவங்கி, தற்போதும் அவ்வப்போது மழை பெய்து வருவதால், பூங்கா பசுமைக்கு திரும்பியுள்ளது. இதனால், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்து, பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.இதற்கிடையில், தற்போது பசுமை குடில்களில் அரிய வகை பூக்கள் தயார் செய்து, அடுத்த மாதம் நடைபெறும் கோடை விழாவில், பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய பூங்கா நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.