மேலும் செய்திகள்
'டில்லி உஷ்ஷ்ஷ்...!' தொடரும் கருத்து வேறுபாடு
08-Sep-2024
பந்தலுார்: பந்தலுாரில் காவலன் 'எஸ்.ஓ.எஸ்' செயலியை பதிவிறக்கம் செய்வதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். --காவல்துறை சார்பில், பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினரும், தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளும் விதமாக காவலன் எஸ்.ஓ.எஸ்., செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பந்தலுார் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ருக்மணி பேசுகையில், ''சமுதாயத்தில் பல்வேறு வகையான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில், குறிப்பாக வெளியில் வரும் பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நேரங்களில் தங்களை தற்காத்து கொள்ளவும், பிரச்னைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தும் வகையிலும், 'காவலன் எஸ்.ஓ.எஸ்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தங்கள் மொபைல் போன்களில் இதனை பதிவிறக்கம் செய்து வைத்து கொண்டால், குற்ற சம்பவம் குறித்து உடனடியாக தகவல் தெரிவித்து தங்களை தற்காத்து கொள்ளவும், பிரச்னைகள் தொடராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்,'' என்றார். அதில், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மொபைல் போன்களில், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டனர். தொடர்ந்து, கிராமங்களிலும் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
08-Sep-2024